தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் அருகே  காவல் சார்பு ஆய்வாளரை மிரட்டியதாக 4 பேர் கைது

விருதுநகர் அருகே சாலையோரத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவல் சார்பு ஆய்வளாரை மிரட்டியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:59 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே சாலையோரத்தில் மது அருந்தியவர்களை கண்டித்த காவல் சார்பு ஆய்வளாரை மிரட்டியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். 

விருதுநகர்-சாத்தூர் 4 வழிச்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு வாகன காவல் சார்பு ஆய்வாளர் காமராஜ் தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அதில் மருளூத்து கிராம விலக்கருவே பேருந்து நிறுத்தத்தில் வாகனம் நின்று கொண்டிருந்ததை பார்வையிட்டடு ஆய்வு செய்தார். அப்போது, வாகனத்தின் பின்புறம் 4 பேர் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்களாம்.

இது குறித்து உடனே காவல் சார்பு ஆய்வாளர் தட்டிக் கேட்டாராம். அதற்கு அவர்கள் தகாத வார்த்தைகள் பேசியதோடு மிரட்டியும் உள்ளனர். இது குறித்து  காமராஜ் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் 4 பேர் மீதும்  போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.  அதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை செய்ததில் மதுரையைச் சேர்ந்த சடையாண்டி(50), பழனிமுருகன்(35), சுந்தரேஸ்வரன்(33) மற்றும் பழனிச்சாமி(17) என்பதும், மருளூத்து அருகே பழுதாகி நின்றிருந்த லாரியை சரி செய்வதற்காக வந்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.